Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமாவாசை இரவில் பாட்டி சித்தர் சமாதியில் சிறப்பு பூஜை

அமாவாசை இரவில் பாட்டி சித்தர் சமாதியில் சிறப்பு பூஜை
ஆண்கள் பெண்கள் பாராமல் பாட்டிசித்தரை அமாவாசையில் தரிசிக்க சுடுகாட்டிற்கு சென்ற பக்தர்கள் - கரூர் தாந்தோண்றிமலை பகுதியில் உள்ள மயானத்தில் அமாவாசை இரவில் பாட்டி சித்தர் சமாதி முன் பக்தர்கள் படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
சித்தர்கள் என்றால் சிவனை வழிபட்டு அவரின் அருள் பெறுவதற்காக பல்வேறு தவங்கள் மற்றும் தியானங்கள் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டும் அல்லாம் பல்வேறு இடங்களில் சிவனை வணங்கி தவம் செய்தும் அவரை வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு வழிபடுவர்களை  வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பதால் வணங்கி வருகின்றனர்.
 
கரூர் மாவட்டத்தில் நொய்யல் பகுதியில் பாட்டி சித்தர் என்பவர் நீண்ட நாட்களாக தங்கி வாழ்ந்து வந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தார். அவரின் உடலை கரூர் மாவட்டம் தாந்தோண்றிமலை பகுதியில் உள்ள சுடுகாட்டில் பாட்டி சித்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உயிர் பிரிந்த திருவாதிரை நட்சத்திரம், பவுர்ணமி, அமாவாசை தினங்கள் அன்று அவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிறப்பு பூஜைகள் கடந்த மூன்று ஆண்டுகாலமாக செய்து வருகின்றனர்.

webdunia

 
குறிப்பாக மாதம் தோறும் வரும் அமாவாசை இரவில் பாட்டி சித்தருக்கு பிடித்த பலகாரகங்கள் வைத்து அவர் புதைக்கப்பட சுடுகாட்காட்டில்  படையல்லிட்டுனர். இதில் ஆண்கள், பெண்கள் என்று சுடுகாடு என்று பார்க்காமல் பாட்டி சித்தரை வணங்கி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் செல்வம் நிலைக்க பின்பற்றப்படும் சில ஆன்மிக குறிப்புகள்....!!