சென்னையின் முக்கிய சாலையில் பட்டாகத்தியுடன் நின்ற இளைஞர்கள்: பெரும் பரபரப்பு

திங்கள், 12 பிப்ரவரி 2018 (23:10 IST)
சமீபத்தில் ரயில் நிலையம் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று சென்னை சத்யம் திரையரங்கம் அருகில் மூன்று இளைஞர்கள் பட்டாகத்தியுடன் நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியான பகுதியான ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கம் அருகே பட்டாக்கத்தியுடன் நின்றுக் கொண்டிருந்த அந்த மூன்று இளைஞர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் மணிகண்டன், ரமேஷ், மணி என்பதும் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் மூவரும் உறவினர்கள் என்பதும் தங்களுடைய  குடும்பத் தகராறு காரணமாக மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING