Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலம் 8 வழிச்சாலை இன்னுமொரு தூத்துக்குடி சம்பவம் போல் அமைய கூடாது–தமிழிசை செளந்தரராஜன்

சேலம் 8 வழிச்சாலை இன்னுமொரு தூத்துக்குடி சம்பவம் போல் அமைய கூடாது–தமிழிசை செளந்தரராஜன்
, சனி, 23 ஜூன் 2018 (18:11 IST)
கரூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணியின் சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. கரூர் நகரில் கோவை ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞரணி தேசிய செயலாளரும், எம்.பி யுமான பூனம் மஹாராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த., பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜான் கூறுகையில்.,

தமிழக கவர்னர் ஏதாவது திட்டத்தில் குறுக்கிடுகின்றாரா? என்றும் தற்போது அதிகாரத்தில் இருப்பது மாநிலஅரசு தான், ஆகவே, அவர்களின் அதிகாரத்தில் ஏதாவது கவர்னர் குறுக்கிடுகின்றாரா என்பதை முதலமைச்சர் தான் கூற வேண்டுமென்றும், அதை ஸ்டாலின் சொல்லக்கூடாது. ஆகவே இதில் அரசியல் காழ்புணர்ச்சித்தான் இருக்கின்றது. மேலும், எங்கேயாவது ஒரு இடத்தில் கவர்னர் தலையிட்டதினாலும் குறுக்கிட்டினாலும் தான் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளனவா? என்றதோடு, இன்றைய காலக்கட்டத்தில் 1 ½ கோடியாக இருந்த கவர்னர் மாளிகையின் செலவை 30 லட்சமாக குறைத்துள்ளார் என்றும்.,

கவர்னர் ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்கின்றார். ஆகவே, மக்களின் வரிப்பணத்தை மிக, மிக குறைந்த அளவு செலவு செய்து வரும் ஒரு கவர்னர் எவ்வளவு நல்ல மனதோடு இருக்கின்றார். மேலும் மக்களுக்கு சேவை செய்கின்றார். தமிழ்நாட்டில் ஒரு சாதாரணமானவர்கள் கூட சேவை செய்யும் போது, ஒரு கவர்னர் சேவை செய்வது தவறில்லை. ஆகவே, கவர்னரின் இந்த செயல் எந்த விதத்தில் தி.மு.க தலைவருக்கும், ஸ்டாலினுக்கும் இடையூறாக உள்ளது.

மேலும் சேலம் எட்டுவழிச்சாலை குறித்தும், மத்திய அரசின் திட்டத்தினை மாநில அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுகின்றதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவ்வாறு நான் நினைக்க வில்லை, நேற்று கூட ஆட்சியர் சிலவற்றை கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் ஹெக்டருக்கு ரூ 20 லட்சம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இழப்பீட்டை அதிகரிக்க வேண்டுமென்றும், ஒரு ஏக்கருக்கு 7 லட்சம் வீதம் தான் வருகின்றது.

ஆகவே இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டுமென்றும், ஆனால் 9 கோடி வரை கொடுப்பதாக கூறியிருக்கின்றார்கள். ஆகவே விவசாயிகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென்றார். மேலும் ஆங்காங்கே இது சம்பந்தமாக விவசாயிகளோ, பெண்களோ கைது செய்யக்கூடாது. ஆனால் சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டுமென்றார். ஆகவே இந்த எட்டு வழிச்சாலை திட்டம் இன்னுமொரு தூத்துக்குடி சம்பவம் ஆகாமல் இருக்க திட்டத்தினை மேற்படுத்தலாம் என்றதோடு, தவறுகள் களையப்பட வேண்டுமென்றும், ஆனால் திட்டமே வேண்டாம் என்று கூறக்கூடாது என்றார்.

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் மீம்ஸை பாராட்டிய அமைச்சர் ஜெயக்குமார்