Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – தமிழகத் தலைவர்கள் கருத்து

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – தமிழகத் தலைவர்கள் கருத்து
, புதன், 12 டிசம்பர் 2018 (08:28 IST)
நேற்று அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடுவுகளில் பாஜக வின் கை இறங்கி மீண்டும் காங்கிரஸின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளின் தொகுப்பு

ஸ்டாலின் , திமுக தலைவர்
இந்த வெற்றி பிரதமர் மோடிக்கு ஒரு மிகப்பெரிய அடி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி மற்றும்  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறேன் என்று சொன்னார். இது மோடியின் ஆணவத்தினுடைய உச்சகட்டம்.
அவர் அப்படி சொன்ன காரணத்தால் இப்பொழுது நாங்கள் பி.ஜே.பி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல மாட்டோம். முறையாக வர இருக்கக்கூடிய தேர்தலில் மதவாதம் பிடித்திருக்கக் கூடிய ஆட்சியை ஒழிப்பதற்கு வேற்றுமை இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்க முயல்வோம்.

webdunia

தமிழிசை சௌந்தர்ர்ராஜன், தமிழக பாஜக தலைவர்
 ‘சட்டீஸ்கரைத் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக மிக நெருக்கமானப் போட்டியை காங்கிரஸுக்கு கொடுத்துள்ளது. சட்டீஸ்கரில் மட்டும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. அதனால் கடுமையாக உழைத்த பாஜகவினர் தோல்வியடைந்துவிட்டதாக கூற முடியாது.
இந்த தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் நாடாளு மன்றத் தேர்தலைப் பாதிக்காது. ராஜஸ்தான் மக்களேக் கூட சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் நாட்டின் பிரதமராக மோடிதான் வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனால மோடி அலை ஓய்ந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி அலை ஓயவில்லை. அதை ஒருக்காலமும் ஓயவைக்கவும் முடியாது. எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம் ’ எனத் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

webdunia

திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்று பாஜக ஆட்சி செய்த  மாநிலங்களிலேயே தோற்றுவிட்டார்கள். நல்ல தண்ணீர் உள்ள குளத்திலேயே தாமரை மலரவில்லை. தமிழிசை உள்ளிட்டோர் சேறு, சகதி என கூறும் தமிழ்நாட்டில் எப்படி தாமரை மலரும்? வட மாநிலங்களிலேயே தாமரை காணாமல் போய்விட்டது. தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்காது

திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் தலைவர்
பாஜக ஆட்சியிலிருந்த மூன்று மாநிலங்களையும் தக்க வைப்பதில் தான் நரேந்திர மோடியின் எதிர்காலம் அடங்கியிருந்தது. தற்போது இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அடைந்துள்ள தோல்வி 2019 பொதுத்தேர்தலில் 30 இடங்களைக்கூட அதனால் பெறமுடியாது என்பதையே காட்டுகிறது. அதனடிப்படையில் பார்த்தால் 2019 பொதுத்தேர்தலில் மோடியின் வீழ்ச்சி உறுதி என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு தனது பிரச்சாரத்தின் மூலம் மாபெரும் வெற்றியை ராகுல் காந்தி ஈட்டித் தந்துள்ளார். அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியைத் தலைமை ஏற்று வழிநடத்த அவர் தகுதியானவர்தான் என்பதை இதன்மூலம் நிரூபணம் செய்துள்ளார்.

கனிமொழி, திமுக எம்.பி
பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட அச்சாதீன் (நல்லநாள்) இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள்.

webdunia

ரஜினிகாந்த், நடிகர்
பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்பதைத் தெளிவாக இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கமல், மக்கள் நீதி மய்யம் தலைவர்

webdunia

வைகோ, மதிமுக பொதுச்செயலாள்ர்
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நாடெங்கும்  ஒரு அலை வீசுகிறது. 2019-ம் ஆண்டு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸும் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறது.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்
மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில், "புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது" என, பதிவிட்டுள்ளார்.
.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாநிலங்களில் தோல்வி: மோடிக்கு பதில் வேறு தலைவர்?