சுயநினைவை இழந்த சசிகலா : சிறையில் நடந்தது என்ன?

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:19 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சமீபத்தில்தான் சிறையில் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார் சசிகலா. டிடிவி தினகரன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் பெங்களூர் சென்று அவரை சந்தித்து விட்டு வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று திடீரென சசிகலாவிற்கு மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.  உடனடியாக அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் அவர் கண் விழித்ததாக கூறப்படுகிறது. 
 
பெரும்பாலும் சசிகலா தனது காலை உணவை தவிர்த்து விடுகிறாராம்.  மேலும், கடந்த சில நாட்களாகவே சர்க்கரை மாத்திரைகளை சரியாக அவர் எடுத்துக்கொள்வது இல்லையாம். இதன் காரணமாகவே அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்து மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் சசிகலாவை, வெளியே அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள் என செய்தி கசிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் முக்கொம்பு மேலணையில் உடைந்த 8 மதகுகள்: அச்சத்தில் கரையோர மக்கள்