Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது - தினகரனிடம் கூறிய சசிகலா?

இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது - தினகரனிடம் கூறிய சசிகலா?
, வெள்ளி, 23 மார்ச் 2018 (10:42 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். இன்னும் சில சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை சசிகலாவின் தம்பி திவாகரன் கவனித்துக்கொள்கிறார். மற்றபடி ஆறுதல் கூற வரும் உறவினர்களை சசிகலாவே நேரில் சந்தித்து பேசுகிறாராம்.
 
சமீபத்தில்தான் தினகரன் தனது அணிக்கு பெயர் மற்றும் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு சசிகலாவின் பரோல் நாட்களிலேயே வந்துவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கையை பிசைந்து நிற்கும் எடப்பாடி அரசு,  கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் நகர்வுகள்,  பாஜகவிற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள தமிழகம் என அரசியல் களம் சூடி பிடித்துள்ள சூழ்நிலையில்தான் சசிகலா வெளிவந்துள்ளார். எனவே, தமிழக அரசியலை நிர்ணையிக்கும் சில முக்கிய அறிவுரைகள் மற்றும் உத்தரவுகளை அவர் தனது குடும்பத்தினருக்கு பிறப்பிப்பார் என நேற்று செய்திகள் வெளியானது.
webdunia

 
அந்நிலையில்தான், எடப்பாடி தலைமையில் ஒராண்டு நிறைவு செய்ததற்கு இன்று விழா கொண்டாடப்படுவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே, அதிமுக தரப்பில் இருந்து ஒருவரும் நேரில் வந்து நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அறிக்கையும் விடவில்லை. மேலும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியும் கொடுத்தார். அதோடு, நேரில் வர விரும்பிய சிலருக்கும் எடப்படி-ஓபிஎஸ்- தரப்பு தடை போட்டுவிட்டது என சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
 
இந்நிலையில், ஓராண்டு சாதனை விழா நடத்துகிறார்கள். இதுக்கண்டு கொதிப்படைந்த தினகரன், பார்த்தீர்களா? நம் வீட்டில் துக்க காரியம் நடந்துள்ளது. ஆனால், நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த ஆட்சியை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சாதனை விழா நடத்துகிறார்கள். அவர்கள் திட்டமிட்டுதான் அனைத்தும் செய்கிறார்கள். நான் உங்களை சிறையில் சந்திக்கும் போதெல்லாம் என்னை பொறுமையாக இரு எனக் கூறுவீர்கள். இதற்கு மேலுமா என்னை பொறுமையாக இருக்க சொல்கிறீர்கள்?” என எகிறினாராம். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரட்டும். அவர்களை பார்த்துக்கொள்கிறேன என தினகரன் கூறினாராம்.
 
அதற்கு பதில் கூறிய சசிகலா எனக்கும் இப்போதுதான் புரிகிறது. அவர்களை விடக்கூடாது. அவர்களின் ஆட்சி நீடிக்கக் கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய். நான் தடுக்க மாட்டேன் எனக் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே, சசிகலாவின் இந்த பரோல் வருகையால் தமிழக அரசியலில், குறிப்பாக தினகரன் மற்றும் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பினரிடையே நடக்கும் மோதல் இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு: குரங்கணி பலி 20ஆக உயர்ந்தது.