Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாடா ! முடிந்தது சர்கார் பிரச்சனை

அப்பாடா ! முடிந்தது சர்கார் பிரச்சனை
, வெள்ளி, 9 நவம்பர் 2018 (13:58 IST)
மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் மீண்டும் இன்று பிற்பகல் வேளையில் திரையிடப்படுகிறது. மேலும்  இன்று காலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதன்  விளைவால் இப்படத்தின் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் இப்படத்தினை திரையிடுவதற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 
அரசின் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாக எழுந்த சர்சைகளின் அடிப்படையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மற்றும் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் நேற்று இரவு மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் சர்காரில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள்  நீக்கப்பட்டு இன்று பிற்பகல் வேளையில் வெளியிடப்படும் என கூறியிருந்தார்.
 
அரசின் எதிர்ப்புகள்  ஒருபக்கம் இருந்தலும் அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்குள் புகுந்து படம் பார்க்க வந்தவர்களை அடித்தனர். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த விஜய்ன் கட் அவுட்,பேனர்கள்  சூறையாடப்பட்டது.
 
எனவே மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் பிற்பகலில் இருந்து ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
மறுதணிக்கை செய்து படத்தயாரிப்பு குழுவிடம் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
 
இத்தனை நடந்தும் இந்த களேபரத்துக்குக் காரணமான விஜயோ, முருகதாஸோ இன்னும் வாய் திறக்கவில்லை. அதுதான் படம் ரிலீஸாகி பைசா வசூல் ஆகி விட்டதல்லவா...?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோவுக்கு ட்ஃப் கொடுக்கும் ஏர்டெல்: வோடபோன் கொஞ்சம் வீக்தான்!