Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக்கில் மாப்பிள்ளை தேடிய கேரள இளம்பெண்

ஃபேஸ்புக்கில் மாப்பிள்ளை தேடிய கேரள இளம்பெண்
, வெள்ளி, 4 மே 2018 (18:18 IST)
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்கும் சாட்டிங் செய்யவும் மட்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், செய்தி நிறுவனங்கள் என அனைத்து துறையினர்களும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
 
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த 28 வயது பெண், தனக்கு மாப்பிள்ளை தேடி ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். தாய், தந்தை இல்லாத இந்த பெண் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: 'எனது பெயர் ஜோதி. வயது 28. எனக்கு பெற்றோர் கிடையாது. பேஷன் டிசைனிங்  படித்து முடித்துள்ள எனக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். நண்பர்களே...உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள் என்று பதிவு செய்துள்ளார். மேலும் ஜாதி, மதம் மற்றும் ஜாதகம் தேவையில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவருடைய இந்த பதிவினை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்துள்ளனர். இவருக்கு ஒரு நல்ல வரன் ஃபேஸ்புக் மூலம் அமைய வேண்டும் என்று பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.வி.சேகருக்கு இப்படி ஒரு சோதனையா? - நீதிமன்றம் கெடுபிடி