ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து செயல்படுவேன்: நாஞ்சில் சம்பத்

புதன், 16 மே 2018 (08:17 IST)
கடந்த சில நாட்களாகவே நடிகர் ஆர்ஜே பாலாஜி அரசியலில் குதிக்க போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், மதிமுகவில் இணையபோவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது
 
இந்த நிலையில் தினகரன் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய நாஞ்சில் சம்பத், இனிமேல் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'சிறிதுகாலம் அனைத்தில் இருந்தும் விலகியிருந்த நான், அருமைத்தம்பி ஆர்ஜே பாலாஜியின் புதிய பயணத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். புத்தம் புது இளைஞர் ஒருவருடன் கைகோர்த்து ஆவலுடன் பணியாற்ற காத்திருக்கின்றேன்' என்று அவர் கூறியுள்ளார். இருவரும் இணைந்து அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்களா? அல்லது சமூக பணிகள் செய்யவுள்ளார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING