Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரனுடன் சந்திப்பு : பன்னீரின் பதவியை பறிக்க திட்டமிடும் எடப்பாடி?

தினகரனுடன் சந்திப்பு : பன்னீரின் பதவியை பறிக்க திட்டமிடும் எடப்பாடி?
, திங்கள், 8 அக்டோபர் 2018 (12:19 IST)
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து இறக்கி, தான் அந்த பதவியில் அமர வேண்டும் என்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ்- மற்றும் தனக்கும் நெருக்கமான ஒரு நபர் மூலம் சந்திப்பு நடந்தது. அவர் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பினார் என தினகரனும் ரகசியத்தை உடைத்து பேட்டி கொடுக்க தற்போது இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதோடு, எங்களுக்கு எதிராகத்தானே அவர் தர்ம யுத்தம் தொடங்கினார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை அவர் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும். அவர் வாயில் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும். நான் ஒப்புக்கொள்ள வைப்பேன் என தினகரன் பேசியிருப்பது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக, தன்னை பதவியில் இருந்து இறக்க, தினகரனுடன் ஓ.பி.எஸ் டீல் பேசிய விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். எனவே, அவரிடமிருந்து அமைச்சர் பதவியை அவர் பறிக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், ஆளுநர் மற்றும் டெல்லி வட்டாரம் அதை ஏற்காததால் பழனிச்சாமி அமைதியாகி விட்டார் என செய்திகள் வெளியே கசிந்துள்ளது. ஆனாலும், சூழ்நிலை வரும் போது பன்னீரிடமிருக்கும் சில பதவிகள் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன் : பின்னணி என்ன?