Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
, திங்கள், 23 ஜூன் 2014 (11:00 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள 600 பொறியியல் கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
 
அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்துவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று அந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தயாரித்த தகுதிப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டது.
 
இன்று விளையாட்டில் சிறந்த விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு நாளை முடிவடைகிறது. 25 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்காக கலந்தாய்வு நடக்கிறது.
 
இதைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை பிளஸ்-2 தொழில்கல்வி படித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பொது கலந்தாய்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது.
 
கலந்தாய்வுக்கு வருபவர்கள் கொண்டுவரவேண்டிய சான்றிதழ்கள் பற்றிய விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil