Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரங்கணி காட்டுத்தீ அல்ல; தீ வைத்தது இவர்களே: சர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்...

குரங்கணி காட்டுத்தீ அல்ல; தீ வைத்தது இவர்களே: சர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்...
, செவ்வாய், 13 மார்ச் 2018 (16:50 IST)
தேனி குரங்கணி காட்டுக்குள் அனுமதி இல்லாமல் எந்த அற்விப்பும் இன்ற சென்றதால்தான் பிரச்சனையின் போது விரைந்து வந்து செயல்பட முடியவில்லை என கூறப்பட்டது. 
 
ஆனால், இதனை மறுத்து சென்னை டிரெக்கிங் கிளப் இணையதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்தது பின்வருமாறு...
 
குரங்கணி சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அனுபவமிக்கவர்களுடன் சென்றும் விபத்து ஏற்பட்டுவிட்டது. எங்கள் குழுவுடன் ஏற்கனவே அந்த காட்டிற்குள் சென்று இருக்கிறோம். 
 
எப்போதும் போல இந்த முறையும் வனத்துறையிடம் அனுமதி வாங்கி, முறையான கட்டணம் செலுத்தியே சென்றோம். மார்ச் 10 ஆம் தேதி காட்டுக்குள் எங்கள் குழுவுடன் சென்றோம். 
 
நாங்கள் காட்டுக்குள் சென்ற போது அங்கு கொஞ்சம் கூட தீ இல்லை. மறுநாள் 11 ஆம் தேதி திரும்பி வந்தோம். நாங்கள் பாதி வழி வரும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மலை பகுதியில் விவசாயிகள் புற்களை எறித்துக் கொண்டு இருந்தார்கள். 
 
அந்த சமயத்தில் இருந்த கால நிலை காற்று காரணமாக தீ பரவியது. இதனால்தான் பிரச்சனை ஏற்பட்டது. இது மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என பதிவிடப்பட்டுள்ளது. 
 
சென்னை டிரெக்கிங் கிளப் பீட்டர் வேன் கெயிட் என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த நபரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை - ரஜினி ஓப்பன் டாக்