ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன் - அழகிரி அந்தர் பல்டி

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (13:57 IST)
திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அழகிரி கூறியிருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
அழகிரியை திமுகவில் இணைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. இது அழகிரிக்கும் புரிந்து விட்டது. எனவே, திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.
 
அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளாத தெரிகிறது.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அழகிரி “திமுகவில் மீண்டும் இணைய நான் விரும்புகிறேன் எனில் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்” எனக் கூறினார். 
 
இதற்கு முன்பு, திமுகவில் கருணாநிதி மட்டும்தான் தலைவர் என கூறிவந்த அழகிரி, தற்போது திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்க தான் தயாராக இருப்பதாக கூறியிருப்பது திமுகவில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இணையும் அமமுகவின் முக்கிய தலைவர்: அதிர்ச்சியில் தினகரன்

தமிழிசைக்கு ஓட்டு கேக்க சொன்னா.. கனிமொழிக்கு ஓட்டு கேட்ட மெகா கூட்டணி மகான்!

தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் இவர் படம் எதற்கு – குடும்பக் கட்சியென நிரூபித்த திமுக !

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நயன்தாராவின் ஸ்டைலிஷ் லுக்: வைரலாகும் புகைப்படங்கள்!

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரிக்கு தனி தேர்தல் அறிக்கை: பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்

வேட்பாளர் அறிவிப்பால் பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்

தமிழிசைக்கு ஓட்டு கேக்க சொன்னா.. கனிமொழிக்கு ஓட்டு கேட்ட மெகா கூட்டணி மகான்!

காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்...

அடுத்த கட்டுரையில்