செம காமெடி பீஸ் நீங்க...எஸ்வி சேகரை கலாய்த்த தமிழ் நடிகர்

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (20:51 IST)
சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க மறுத்துவிட்டதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சங்க நிர்வாகியும் நடிகருமான நந்தா, ' “நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு கவலை? பஞ்சாயத்து தேர்தலில் ஒரு சீட் வெல்ல முயற்சி செய்யுங்கள். தமிழக மக்களுக்கும், எங்கள் சங்கத்து உறுப்பினர்களுக்கும் உதவி செய்வதில் தான் எங்களுக்கு யோசனை. இந்த அழுக்கு அரசியலை நிறுத்துங்கள். திருமதி தமிழிசை அவர்களே என்று கூறியுள்ளார்.
 
மேலும் மறைந்த தலைவர் திரு வாஜ்பாய் அவர்கள் மீது எங்களுக்கு அதிக மரியாதை உள்ளது. மொத்த நிகழ்ச்சியையும் நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். சத்யன் என்ற யாரும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கவில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதேபோல் எஸ்வி சேகரின் டுவிட்டுக்கு பதிலளித்த நந்தா, 'மறைந்த திரு வாஜ்பாய் அவர்களை உயர்ந்த தலைவராக நாங்கள் மதிக்கிறோம். நடிகர் சங்கம் மற்றும் தமிழ் சினிமா சார்பாக அனைத்துப் படப்பிடிப்புகளையும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துவிட்டோம். 
 
டாக்டர் கலைஞர் நமது நடிகர் சங்கத்தின் மூத்த, ஆயுட்கால உறுப்பினர்களில் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது எங்கள் அகந்தை அல்ல. உங்கள் அறியாமை. செம்ம காமெடி பீஸ் சார் நீங்க. ஹய்யோ, ஹய்யோ.. என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING