நண்பர்கள் திட்டியதுதான் காரணமா? பள்ளி மாணவன் தற்கொலை

திங்கள், 10 செப்டம்பர் 2018 (20:05 IST)
மதுரையில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவன், சக மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் திட்டிய காரணத்தினால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மதுரை மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி விடுமுறை என சகமாணவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளான். இதனை நம்பி சக மாணவர்களும் மறுநாள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.
 
இந்த செய்தி தலைமை ஆசிரியர் வரை சென்றுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இதனால் அந்த பெற்றோரை அழைத்து தலைமை ஆசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார். 
 
சக மாணவர்களும் அந்த மாணவனை திட்டியுள்ளனர். இதில் அந்த மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டான். பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை; சென்னை வானிலை ஆய்வு