எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை!

வியாழன், 3 மே 2018 (11:00 IST)
எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை ! 
எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை !
 
இந்தியம் செழிக்க உதவிய அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
விந்தியம் பிரமித்த அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
பிரதமர்களுக்குப்  புத்தி சொன்ன அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
 
நிர்மலாக்களின் முந்தானையில் மாட்டிக்கொண்டாயோ !
மோடி மஸ்தான்களின் லட்ச ரூபாய் சூட்க்கோட்டில் சிக்கி கொண்டாயோ !
 
போராட்டமே வாழ்க்கையாய் போன தமிழகம்  !
காவேரி நனவான அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
பிறழ் நாக்கு நீதி மன்றங்களும் நீதி அரசர்களும் 
சுண்டைக்காய் சேகர்களை  எல்லாம் பிடிக்க முடியாத காவல் துறை
ஆந்திராவுக்கு ஓடும் தொழில் நிறுவனங்கள்
 
அப்பனுக்குப் புத்தி சொன்ன அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
 
காந்துகளும், ஹாசான்களும் நாடாள புறப்பட்டு இருக்கிறார்கள்
எட்சைகள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்   

திமில்கள் நிறைந்த   அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
ஏங்கி நிற்கும் மக்கள் ! தாங்கி நிற்கும் பழனிச்சுவாமி
ஆனால் அவர் தாங்கி நிற்பது மக்களை அல்ல! 
டெல்லியின் ராஜ வியூக விற்பன்னர்களை !  
தன்மானம் இழந்து தரணி ஆளும் இரண்டு செக்கு மாடுகள் !
 
விலங்கொடித்து, பகலவன் பூமியை அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் !
 
ஒரு மனச்சாட்சி நித்திரையில்
மறு மனச்சாட்சி ஓய்வில்
டெல்லிக்குரங்குகள் தமிழகத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறது   
அந்த நச்சுக்குரங்குகள் இல்லாத தமிழகத்தை எங்கே தேடுவேன் !

இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் தலையில் பொடுகு வந்துவிட்டதே என்ற கவலை இனி இல்லை....!