Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிதாக கிடைக்கக் கூடிய நித்திய கல்யாணியின் அற்புத மருத்துவ குணங்கள்....!

எளிதாக கிடைக்கக் கூடிய நித்திய கல்யாணியின் அற்புத மருத்துவ குணங்கள்....!
நித்திய கல்யாணியின் மலர், இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவகுணம் ஆஸ்துமா, குளிர் காய்ச்சல், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய்,  உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை விரட்டுவது மட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்.
 
பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும்.  இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால்  அடையாளங்காண முடிகின்றது.
 
புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும். செய்முறை: நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு  சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைத்த  பொடியிலிருந்து ஆறு கிராம் கிராம் வரை எடுத்து 400 மில்லி தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைத்து, தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.
webdunia
நீரழிவு நோய்க்கும் நித்தியகல்யாணியை பயன்படுத்தலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.  நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன்,  அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும். 
 
குறிப்பு: கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் உணவு வகைகள்...!