அமைச்சர் பதவியை நிராகரித்த சாமியார்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

செவ்வாய், 12 ஜூன் 2018 (16:08 IST)
ஆன்மீக தலைவர் பையூஜி மகாராஜ் இன்று இந்தூரில் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அவரது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இவரது ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் பிரபலமானவர் பையூஜி மகாராஜ். இவரது அசிரமம் இந்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. 
 
ஈநிலையில், இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேருக்கு திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ். ஆனால் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். 
 
இவரது தற்கொலை தொடர்பாக வேறு எந்த விவரமும் தெரியவில்லை. எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என்பதற்கான காரணமும் தெரியவில்லை. இந்த சோக நிகழ்வு குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING