மக்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த குமாரசாமியின் சகோதரர் : சர்ச்சை வீடியோ

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (09:51 IST)
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்நாடக மக்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த முதல்வர் குமாரசாமியின் சகோதரர் செயல் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

 
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை செய்து வருகிறது. அதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், பல்வேறு கிராமங்கள் வெள்ளதால் சூழப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 11 பேர் உயிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், அவர்களை சந்தித்து உதவிகள் வழங்க கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா நேற்று முகாமுக்கு சென்றார். அப்போது, நாய்களுக்கு ரொட்டி துண்டுகளை தூக்கி விசுவது போல, மக்களுக்கு அவர் பிஸ்கெட் பாக்கெட்டை தூக்கி வீசினார். பசியில் வாடிய சிலர் அதை பெற்றுக்கொண்டாலும், சுயமரியாதையுள்ள பலரும் அதை நிராகரித்தனர். அமைச்சரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இதைக்கண்ட பலரும் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

திமுகவில் இணையும் அமமுகவின் முக்கிய தலைவர்: அதிர்ச்சியில் தினகரன்

திருப்பூர் அதிமுக எம்பி சத்யபாமா கட்சி மாறுகிறாரா?

செண்டிமெண்ட் பிரகாரம் அ.தி.மு.க மக்களவை தேர்தல் கரூரில் துவக்கம்

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நயன்தாராவின் ஸ்டைலிஷ் லுக்: வைரலாகும் புகைப்படங்கள்!

தொடர்புடைய செய்திகள்

அமமுகவில் இருந்து விபி கலைராஜன் திடீர் நீக்கம்!

திமுகவில் இணையும் அமமுகவின் முக்கிய தலைவர்: அதிர்ச்சியில் தினகரன்

ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைக்கு அனுப்புவது இவரைத்தான்: ஸ்டாலின் ஆவேசம்

வானத்தில் தோன்றிய திடீர் துளை... ஏலியன்ஸ் பூமிக்கு வரும் வழியா? வைரல் வீடியோ!!

செண்டிமெண்ட் பிரகாரம் அ.தி.மு.க மக்களவை தேர்தல் கரூரில் துவக்கம்

அடுத்த கட்டுரையில்