Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானே இறங்கி செய்றேன்: சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் அதிரடி!

நானே இறங்கி செய்றேன்: சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் அதிரடி!
, வியாழன், 18 அக்டோபர் 2018 (11:05 IST)
உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐய்யப்ப பக்தர்களும் இந்து வலதுசாரி அமைப்புகளும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்நிலையில், நேற்று சபரிமலை நடை ஐப்பசி மாத சிறப்பு வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
 
இதனால் பெண் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதை தடுக்க போராட்டக்காரர்கள் சபரிமலையை முற்றுகையிடத் துவங்கினர். இதனால், கலவரத்தை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
ஆனால், என்ன பிரச்சனை வந்தாலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார் பினராயி விஜயன். சபரிமலை செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 
 
அதே சமயம், போராட்டக்காரர்களை தேவைப்படும் சமயங்களில் தடியடி நடத்தி அடக்கியும் வைத்தார்கள். இவ்வாறு இருக்க, சபரிமலை விவகாரத்தில் தானே இறங்கி செயல்பட முடிவெடுத்துள்ளார் பினராயி விஜயன். 
 
அதன்படி, இந்த மாத இறுதியில் இடதுசாரி அமைப்புகள் கேரளா முழுக்க சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்தும் பெண்கள் உரிமை குறித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளார். கேரளா முழுக்க, மாவட்டம் மாவட்டமாக சென்று இந்த தீர்ப்பு குறித்து மக்களிடம் பேச இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலடி எடுத்து வைச்ச பாராபட்சமின்றி கைதுதான்: மிரட்டும் டிரம்ப்