மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் - அடித்து கொலை செய்த கணவன்

புதன், 13 ஜூன் 2018 (15:36 IST)
தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

 
அந்தேரி கிழக்கு எம்.ஐ.டி.சி. பகுதியில் வசிப்பவர் வசிஸ்ந்த் பாண்டே. அவரும் அவரின் நண்பர் விஜய் சுக்லாவும் அந்தேரி பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தனர். இதில் வசிஸ்ந்த் பாண்டே மட்டும் தனது மனைவியுடம் தங்கியிருந்தார். சுக்லாவின் குடும்பம் உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர்.
 
இந்நிலையில், சுக்லாவிற்கும், பாண்டேவின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாண்டே வீட்டில் இல்லாத நேரங்களில் அவரின் மனைவியுடன் சுக்லா உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் பாண்டேவிற்கு தெரியவர மனைவி மற்றும் நண்பனை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ள உறவு தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய் சுக்லா தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற பாண்டே இரும்பு கம்பியால் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், சுக்லா அந்த இடத்திலேயே பலியானார். 
 
ஆனால், காவல் நிலையம் சென்ற பாண்டே தனது நண்பரை மர்ம ஆசாமிகள் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், பாண்டேவின் சட்டையில் உள்ள ரத்தகறையை வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் சுக்லாவை கொலை செய்தது தெரியவந்தது.
 
இதையடுத்து பாண்டேவை போலீசார் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING