ஒரே மாதத்தில் 4 தற்கொலைகள்: மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்திற்கு போடப்பட்ட வலை

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (03:33 IST)
காராஷ்டிராவில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தின் உயரத்தில் இருந்து குதித்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் நான்கு பேர் தற்கொலை செய்துள்ளதால் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு வலை மாட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைமை செயலக கட்டிடத்தின் நடுவில் நீண்ட இடைவெளி இருப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு தற்கொலை இந்த கட்டிடத்தில் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தற்போது இரும்பு கம்பியிலான வலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் உயரத்தில் இருந்து குதித்தாலும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING