கைதிகளுக்கு டைம்பாஸ்: சிறையில் எல்.இ.டி. டி.வி - அரசின் அதிரடி முடிவு

திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:58 IST)
உத்திரபிரதேசத்தில் கைதிகள் ஜெயிலில் டைம்பாஸ் செய்ய ரூ.3½ கோடி ரூபாய் செலவில் டிவிக்கள் வாங்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 70 ஜெயில்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு குற்றங்களை செய்த குற்றத்திற்காக அவர்கள் இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தனிமையில் வாடுவதால் சோர்வாக காணப்படுகின்றனர். ஆகவே அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 70 ஜெயில்களில்  900 டி.வி. வாங்க ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைதிகளை திருத்தும் வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது.
 
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் நானும் ரவுடிதான்... போலீசாரை மிரட்டிய புல்லட் நாகராஜ் கைது....