நள்ளிரவில் பேருந்தில் இருந்து இறங்கிய இளம்பெண்ணுக்கு டிரைவர்-கண்டக்டர் செய்த உதவி

புதன், 13 ஜூன் 2018 (09:42 IST)
கேரள மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனியாக இறங்கிய இளம்பெண்ணுக்கு அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்த உதவி இணையதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
 
கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று கடந்த ஞாயிறு அன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கோபாகுமார் என்பவர் டிரைவராகவும் ஷாய்ஜூ என்பவர் கண்டக்டராகவும் பணிபுரிந்தனர்.
 
இந்த நிலையில் இந்த பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் ஒருவர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்திற்கு நள்ளிரவு 1.30 மணிக்கு வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. இதனால் தனியாக அந்த பெண்ணை இறக்கிவிட்டு செல்ல மனமில்லாமல் அவரது உறவினர் வரும் வரை காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் சகோதரர் வந்த பின்னரே பேருந்து அந்த இடத்தை விட்டு சென்றது. 
 
இதுகுறித்து அந்த பெண் தனது முகநூலில் பதிவு செய்து கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு நன்றி கூறினார். இந்த பதிவு தற்போது வைரலாகி பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING