Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை: துல்லிய தாக்குதலுக்கு திட்டமா...?

போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை: துல்லிய தாக்குதலுக்கு திட்டமா...?
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (19:09 IST)
140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
வாயு சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.
 
இலகு ரக தேஜாஸ் விமானங்கள், நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் (ஏ.எல்.எச்.), தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, வானில் இருந்து வான் இலக்கை தகர்க்கும் அஸ்திரா ஏவுகணை போன்றவை இரவிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தங்கள் வலிமையை உறுதி செய்தன.
webdunia
இதைத்தவிர மிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன. ஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது. 
 
இது போன்ற ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுப்பட்டுள்ளதால் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் மீண்டும் ஏதேனும் துல்லிய தாக்குதல் நடக்ககூடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவலைப் பிள்ளை ஸ்டாலின் என்ன செய்து விடுவார்..? செல்லூர் ராஜூ நக்கல்