Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் மீண்டும் கனமழை : 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் மீண்டும் கனமழை : 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
, புதன், 15 ஆகஸ்ட் 2018 (18:05 IST)
கேரள மாநிலத்தில் மீண்டும் கனமழை தொடங்கியிருப்பதால் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  
webdunia

 
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.  கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
 
கேரளாவில் பெய்த மழையில் இதுவரை 58 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ராணுவமும், பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
webdunia

 
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்னும் ஒருவாரத்திற்கு கனமழை பெய்யும் இந்திய என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து வயநாடு உள்ளிட்ட பகுதிகள் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. எனவே, இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, கொச்சி, மலப்புரம்,  கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுல்ளது. 
 
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியிருப்பாது அம்மாநிலத்தில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதந்திரம் எஸ்.வி.சேகர்களுக்கு...திருமுருகன் காந்திகளுக்கில்லை : வைரல் புகைப்படம்