அம்பானி மகனின் திருமணம் - ஒரு பத்திரிக்கையின் விலை ஒரு லட்சம்

செவ்வாய், 12 ஜூன் 2018 (15:04 IST)
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கான பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் இந்தியாவின் முமேஷ் அம்பானி. இவரது மகன் ஆகாஷ் அம்பானிக்கும் பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தா அவர்களின் மகள் ஸ்லோகோ மேத்தாவுக்கும் சமீபத்தில் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறும் என தெரிகிறது.
இந்நிலையில் ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்கள் வைரலாகி வருகிறது. பாக்ஸ் வடிவில் உள்ள இந்த அழைப்பிதழில் விநாயகர் சிலை உள்ளது. ஒரு அழைப்பிதழின் விலை ஒரு லட்சம் இருக்கும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING