Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2019 தேர்தல்: தெலுங்கு தேசத்தோடு இணைய முயற்சிக்கும் காங்கிரஸ்?

2019 தேர்தல்: தெலுங்கு தேசத்தோடு இணைய முயற்சிக்கும் காங்கிரஸ்?
, சனி, 1 செப்டம்பர் 2018 (13:27 IST)
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தெலுங்கு தேசம் கட்சி. ஆனால், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்கு தேசம் கட்சி. 
 
மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த போது காங்கிரஸ் இதற்கு ஆதரவு அளித்தது. இதனால் காங்கிரஸுடன் சந்திரபாபு நாயுடுவுக்கு நட்பு மலர்ந்தது.
 
இந்நிலையில், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகரராவும் பாஜகவுடன் நெருங்கி வருகின்றனர். இந்த கூட்டணியை எதிர்த்து இரு தேர்தல்களிலும் நாயுடுவும் நாங்களும் தனித்தனியே போட்டியிட்டால் அதன் முழுப்பலனும் பாஜக கூட்டணிக்கே கிடைக்கும். 
 
இதை தவிர்க்க ஆந்திராவில் மட்டுமாவது கூட்டணிக்கு முயன்று வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சியோடு இணைய காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவாக தெரிகிறது. 
 
ஆனால், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி குறித்த பேச்சு எழுந்தபோது, கூட்டணி குறித்த பேச்சே இல்லாத போது அது தொடர்பாக ஏன் கருத்து கூறவேண்டும் என சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேதனையாக இருக்கிறது : விஜயகாந்தின் மகன் வெளியிட்ட வீடியோ