ரயில் படிகட்டில் குரங்கு ஷேஷ்டையில் ஈடுபட்ட வெத்துவேட்டு நபர் கைது

புதன், 12 செப்டம்பர் 2018 (07:19 IST)
உத்திரபிரதேசத்தில் ரயில் பெட்டி ஒன்றில் சாகசம் என்ற பெயரில் வாலிபர் குரளி வித்தை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
ரயிலில் பயணம் செய்வவோர் படிகட்டில் நின்றவாறு பயணம் செய்யதீர், அது உயிருக்கே ஆபத்து என அரசு எவ்வளவோ மக்களிடம் கூறி வருகிறது. ஆனால் சில வெத்துவேட்டு ஜென்மங்கள் அதனை பொருட்படுத்தாமல் ரயில் படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
 
உத்திரபிரதேசத்தின் ஹரோடி பகுதியில் பயணி ஒருவர் சாகசம் என்ற பெயரில் ரயில் படிகட்டில் தொங்கியவாறு குரளி வித்தை செய்து கொண்டிருந்தார். தயவு செய்து உள்ளே வாருங்கள் என சக பயணிகள எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் உள்ளே வரவில்லை. தொடர்ந்து லூசுத் தனமான செயல்களை செய்து கொண்டிருந்தார்.
 
இதுகுறித்து பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்புத் துறையினர் அவனை கைது செய்தனர். ரயில் பயணிகளிடம் கொள்ளையடிப்பது தான் இவனது முழு நேர வேலை என போலீஸார் கூறினர். போலீஸார் அவனை செமையாக வெளுத்தனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING