Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விதி மதி உல்டா - திரைவிமர்சனம்!!

விதி மதி உல்டா - திரைவிமர்சனம்!!
, சனி, 6 ஜனவரி 2018 (16:10 IST)
ரைட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், எம்எஸ்எம் மூவி டிரேடர்ஸ் வெளியிட ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன் ஆகியோர் நடிக்க, ஐ.மார்ட்டின் ஜோ ஓளிப்பதிவில், அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில், விஜய் பாலாஜி இயக்கத்தில், திரைக்கு வந்திருக்கும் படம் விதி மதி உல்டா. 
 
நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு போகாமல் வீட்டில் வெட்டியாக இருக்கிறார். இவருடைய அப்பா ஞானபிரகாசம், புரோக்கர் செண்ட்ராயனுக்கு கமிஷன் தராத காணத்தால், ரமீஸ் ராஜவை கடத்தி பணத்தை திரும்பி பெற நினைக்கிறார். 
 
இதற்கு மத்தியில், நாயகன், நாயகி ஜனனி ஐயரை பார்த்ததும் காதல் வசப்படுகிறார். பல நாட்கள் பின்தொடர்ந்து பின்னர் தன் காதலை ஜனனி ஐயரிடம் கூறுகிறார். முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் காதலை ஏற்றுக்கொள்கிறார். 
 
இது ஒருபுறம் இருக்க ஜனனி ஐயரை, சென்னையில் மிகப்பெரிய  ரவுடியான டேனியல் பாலாஜியின் தம்பி ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரது காதலை ஜனனி ஏற்க மறுக்கிறார். இதனால் ஜனனியை கடத்தி ஒரு பாழடைந்த கம்பெனியில் அடைக்கிறார். இதே இடத்தில்தான் செண்ட்ராயனும் ரமீஸ் ராஜானை கடத்தி கொண்டு வருகிறார். 
 
அப்போது, திருடனான கருணாகரந்தான் திருடிய பொருட்களை எடுத்து செல்ல நாயகன், நாயகி கடத்தி வைக்கப்பட்டிருக்கும் கம்பெனிக்கு வருகிறார். இவர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ள, ஏற்படும் மோதலில் டேனியல் பாலாஜியின் தம்பி எதிர்ப்பாராத விதமாக சுட்டுக்கொள்ளப்படுகிறான். 
 
இதை அறிந்த டேனியல் பாலாஜி, தனது தம்பியை கொன்றது ரமீச் ராஜாதான் என நினைத்து அவரது பெற்றோரை கொன்றுவிடுகிறான். அவ்வளவுதான கதை என நினைக்கும் போது நாயகன் பதற்றத்துடன் தூக்கத்தில் இருந்து எழுகிறார். ஆம், இவை அனைத்தும் கனவே. 
 
ஆனால், கமவில் தோன்றிய அனைத்தும் நாயகனின் வாழ்க்கையில் நடக்க துவங்குகிறது. அடுத்து என்ன நடக்கும் என தெரிந்த நிலையில், அதை நடக்கவிடாமல் எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. 
 
படத்தின் நாயகனாக ரமீஸ் ராஜா, வெகுளித்தனமான நடிப்பால் கவர்கிறார். நாயகி ஜனனி ஐயர், முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சிவரை படத்தில் பயணிக்கிறார். சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். 
 
வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் டேனியல் பாலாஜி. கருணாகரனும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். சென்ட்ராயன், ஞானபிரகாசம் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
 
இதுபோன்ற கதை களத்தில் ஏற்கனவே படங்கள் வந்திருந்தாலும், இப்படத்தை காமெடியுடன் சொல்லிருக்கிறார் இயக்குனர் விஜய் பாலாஜி. அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் அநாகரீகமாக பேசுகிறார்; பொங்கி எழுந்த பவர் ஸ்டார்