Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யா..யா.. ராமராஜனும் ராஜ்கிரணும் மற்றும் கனகாவும்

யா..யா.. ராமராஜனும் ராஜ்கிரணும் மற்றும் கனகாவும்
, வியாழன், 19 செப்டம்பர் 2013 (10:22 IST)
நாளை யா..யா... வெளியாகிறது. விமல், சிவ கார்த்திகேயன் நடிக்கும் காமெடிப் படங்கள் வசூலில் கலக்கையில் மிர்ச்சி சிவாவின் படங்கள் மட்டும் காற்று வாங்குகின்றன. சிவாவின் ரேஸி காமெடி ரசிகர்களை பல நேரம் ஈர்ப்பதில்லை. இப்படியொரு சூழலில் வெளியாகிறது யா..யா...
FILE

இந்தமுறை சந்தானம் சிவாவின் தோழனாகியிருக்கிறார். படத்தின் ட்ரெயலர் அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை. அதே சோம்பேறி காமெடி. சிவாவின் கேரக்டர் பெயர் ராமராஜன். அவரது அம்மா ராமராஜனின் ரசிகை என்பதால் பிள்ளைக்கு அந்த பெயரை வைத்திருக்கிறார். சந்தானத்தின் பெயர் ராஜ்கிரண். அவரின் அப்பா ராஜ்கிரண் ரசிகர்.

இத்தோடு முடிந்தால் பரவாயில்லை. சிவாவின் அத்தை

மகளின் பெயர் கனகா. கரகாட்டக்காரன் கனகா மாதிரி சிவாவை கல்யாணம் செய்தே ஆவேன் என்று ஒற்றைக்காலில் நிற்பதால் இந்த பெயர்.
webdunia
FILE

பாடாவதி ஸ்டாரையும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரிய நாடக நடிகரான இவர் சினிமாவில் நடிப்பவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிப்பவராக வருகிறார்.

அரவான், பரதேசியில் கரியால் மெழுகப்பட்ட தன்ஷிகாவுக்கு ஒரிஜினல் கலரில் நடிக்கிற வாய்ப்பை இயக்குனர் ராஜசேகரன் இந்தப் படத்தில் தந்திருக்கிறார். சந்தியா சந்தானத்தின் ஜோடியாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

வெற்றி உளிப்பதிவு செய்ய, விஜய் எபனேசர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டதால் லாஜிக் பார்க்காமல் ரசிங்க என்கிறார் சிவா. கொஞ்சம் லாஜிக் இருந்தால்தானே எதையும் ரசிக்க முடியும்?

படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil