Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி சோடா - ஒரு கொரில்லா அட்டாக்

கோலி சோடா - ஒரு கொரில்லா அட்டாக்
, வியாழன், 23 ஜனவரி 2014 (10:54 IST)
சினிமாவில் நீங்கள் இயக்குனராக இல்லாமல் வேறு எதுவாக இருந்தாலும் அது இரண்டாம்பட்சம்தான். இயக்குனர்தான் கேப்டன் ஆஃப் தி ஷிப். இருமுறை அந்த தொப்பியை அணிந்தவர்களால் அதனை கழற்றுவது கடினம்.
FILE

2006 ல் அந்த தொப்பியை முதல்முறையாக போட்டார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். முதல்முறை என்பதால் கட்டுப்பாட்டில் நிற்காமல் கப்பல் கவிழ்ந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு கோலி சோடாவின் மூலம் மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.

அடையாளப் பிரச்சனைதான் இந்தப் படத்தின் கதை. அடையாளமே இல்லாத ஒரு குரூப்பின் அடையாள சிக்கல்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார் விஜய் மில்டன். மீண்டும் 2006 ரிப்பீட் ஆகுமோ என்று அவரது பேச்சு பயமுறுத்தினாலும் டீஸர் வேறு மாதிரி உள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் வேலை பார்க்கும் சிறுவர்களும் அல்லாத டீன்ஏஜும் அல்லாத இரண்டுங்கெட்டான் வயதுக்காரர்களின் கதையிது. பாண்டிராஜின் பசங்க படத்தில் நடித்தவர்கள்தான் முக்கிய நட்சத்திரங்கள்.
webdunia
FILE

ஆள்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் நான்கு கேமராக்களை மறைத்து வைத்து கொரில்லா பாணியில் படமாக்கினார்களாம்.

அருணகிரி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பு பாரதி சீனி. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை விநியோகிக்கிறது. நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்று வழங்கியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil