Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ ஏர் நிறுவனம் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்க முடிவு

கோ ஏர் நிறுவனம் 72  ஏர்பஸ் விமானங்களை வாங்க முடிவு
, வியாழன், 14 ஜூலை 2016 (11:25 IST)
இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான கோ-ஏர் மேலும் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


 


நாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்று கோ-ஏர் நிறுவனம். இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தனது வர்த்தகச் சேவையை விரிவாக்கம் செய்ய விரும்பும் கோஏர் தன்னை ஆயத்தம் செய்யும் வகையில் புதிதாக 72 ஏர்பஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

ஃபார்ன்பரோ (Farnborough) இண்டர்நேஷ்னல் விமானக் கண்காட்சியில் கோஏர் விமான நிறுவனம் 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான 72 ஏர்பஸ் ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் கூடுதலான தள்ளுபடிகளைக் கோஏர் பெறும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது. காரணம் ஏர்பஸ் நிறுவனம் இந்த ஆர்டரை பல்க் ஆர்டராகப் பார்க்கிறது.

இது நாள் வரை கோ-ஏர் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 144 விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சட்டப்பேரவை வரும் 21-ஆம் தேதி கூடுகிறது