Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பரபரப்பு வெற்றி

ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பரபரப்பு வெற்றி
, வெள்ளி, 15 மே 2015 (08:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட்டின்  51 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


 

 
ஐபிஎல் தொடரின் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சிமோன்ஸ், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினர்.
 
முதல் ஓவரை உமேஷ்யாதவ் வீசினார். அந்த ஓவரின் 5 ஆவது பந்தை பார்த்தீவ் பட்டேல் முதல் பவுண்டரியை பதிவு செய்தார்.
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் குறைவாகவே இருந்தது.
 
ஸ்கோர் 4.2 ஓவர்களில் 29 ரன்னாக இருக்கையில் பார்த்தீவ் பட்டேல் (21 ரன், 14 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
 
இதைத் தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார். 6 ஆவது ஓவரில் மோர்னே மோர்கல் வீசிய பந்தை தொடக்க ஆட்டக்காரர் சிமோன்ஸ் அடித்த பந்தை மனிஷ் பாண்டே பிடித்ததால், சிமோன்ஸ் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
 
இதையடுத்து வந்த அம்பத்தி ராயுடு 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரோகித் சர்மா 21 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரினின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 79 ரன்னாக இருந்தது.
 
பின்னர், 5 ஆவது விக்கெட்டுக்கு ஹர்டிக் பான்ட்யா, பொல்லார்ட்டுடன் இணைந்தார். பொல்லார்ட் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாட மறுமுனையில் ஹர்டிக் பான்ட்யா அதிரடியாக விளையாடினார்.
 
இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் வேகமாக உயர தொடங்கியது. 15.1 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. ஹர்டிக் பான்ட்யா 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 17ஆவது ஓவரில் உமேஷ்யாதவ் பந்து வீச்சில் ஹர்டிக் பான்ட்யா தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உறசாகப்படுத்தினார்.
 
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
 
பொல்லார்ட் 38 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்னும், ஹர்டிக் பான்ட்யா 31 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
 
கொல்கத்தா அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், மோர்னே மோர்கல், சுனில் நரின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
இதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது.
 
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது.
 
கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்ட் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில், நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற யூசுப் பதான் (52 ரன், 37 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil