Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடை விடுமுறைக்கு ஏதுவான ஏலகிரி

கோடை விடுமுறைக்கு ஏதுவான ஏலகிரி
, திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:54 IST)
கோடை கால‌ம் துவ‌ங்‌கியது‌ம், ப‌ள்‌ளி‌க் க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டதாலு‌ம் சு‌ற்றுலா‌த் தலங்க‌ளு‌க்கு ம‌க்க‌ள் படையெடு‌க்க‌த் துவ‌ங்‌கின‌ர். அதுபோ‌ன்று பய‌ணிக‌ளி‌ன் படையெடு‌ப்‌பி‌ல் முக்கியமான உள்ள ஒரு சுற்றுலா தளம் ஏலகிரி.
 
ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல ஒரு பெரும் வளர்ச்சியற்ற தலமாக இல்லாவிட்டாலும், ஏலகிரியில் மக்கள் கோடை விடுமுறை நாட்களை கழிக்க அதிகமாக படையெடுக்கின்றனர். ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1048 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் உள்ளது.
 
இங்கு சுலகாம்பாறை நீர்வீழ்ச்சி, பூங்கானூர் ஏரி, குழந்தைகள் பூங்கா, இயற்கை பூங்கா, சிவன் கோயில், ஜலகம்பாறை அருவி, தொலைநோக்கி இல்லம், மங்கலம் தாமரைக்குளம் என பலபுகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக அங்கிருக்கும் சுவாமிமலை மலையேற்றத்துக்கு ஏற்றது.
 
மேலும், கோடையில் பயணிகளின் வருகையொட்டு சுற்றுலாதுறையினர் சார்பில் அங்கு கோடைவிழா நடைபெறும். ஏலகிரிக்கு செல்ல சென்னை, வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தங்க மீன்கள்’ படத்தை மோசம் என விமர்சித்த மிகப்பெரிய இயக்குநர்