கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகை பலி

புதன், 17 ஜனவரி 2018 (15:59 IST)
கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (29). இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிட்னி போலீஸார் விபத்தில் சிக்கிய ஜெசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விலியன் (60) மற்றும் சகோதரி அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் கடந்த வாரம் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகா பால்கோல்டும் நேற்று பரிதாபமாக மரணம் அடைந்தார். இதனால் ஹாலிவுட் திரையுலக வட்டாரங்களும், அவரது ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING