Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போண்டியாகும் பேடிஎம்? இனி ஆஃபர்கள் கிடையாதா...?

போண்டியாகும் பேடிஎம்? இனி ஆஃபர்கள் கிடையாதா...?
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (14:22 IST)
பேடிஎம் நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் பிசினஸ் மாற்றங்கள், அந்த மாற்றங்களுக்கு ஆகும் செலவுகள், செலவினால் கிடைக்கும் சொத்துக்கள், மற்றும் லாப நஷ்டங்களை எல்லாம் கணக்கில் எடுத்து அடுத்த ஏழு ஆண்டுகளில் பேடிஎம் நிறுவனம் எந்த நிலையில் இருக்கும் என்ற கணிப்புக்கள் வெளியாகியுள்ளது. 
 
கேஷ் பேக், ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி தள்ளுபடி ஆகியவற்றை வழங்கி பிரபலமடைந்த பேடிஎம் சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறதாம். மேலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்குமாம். 
 
அதாவது, கடந்த 2018 - 2019 நிதி ஆண்டில் சுமார் ரூ.870 கோடியும், 2019 - 2020 நிதி ஆண்டில் சுமார் ரூ.2100 கோடி வரையும் நஷ்டமடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதிக ஆஃபர்களையும், கேஷ் பேக்குகளையும் வழங்குவதே நஷ்டத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 
webdunia
ஆனால், இன்று வரை இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பேடிஎம் டாப் 5 லிஸ்டில் இருக்கிறது. எனவே, இ காமர்ஸ் தளத்தை பிடிக்க பேடிஎம் செய்யும் முதலீடுகள்தான் நஷ்டத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல், இந்திய வணிக மற்றும் தொழிற்சாலைத் துறை கொண்டு வந்த புதிய சட்டத்தின் படி இந்தியாவில் இ காமர்ஸ் நிறுவனங்கள் கேஷ்பேக்குகள் மற்றும் அதிரடி ஆஃபர்களை கொடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நஷ்டங்கள் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் பிரமுகர்கள் கொலை....கேரளாவில் முழு அடைப்பு...பொதுமக்கள் பீதி