Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கிகள் பயனர்களிடம் வசூலிக்கும் 8 வித கட்டணங்கள்: தெரிந்துக்கொள்ளுங்கள்...

வங்கிகள் பயனர்களிடம் வசூலிக்கும் 8 வித கட்டணங்கள்: தெரிந்துக்கொள்ளுங்கள்...
, சனி, 25 ஆகஸ்ட் 2018 (12:20 IST)
வங்கிகள் என்னதான் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான சேவைகளை கொண்டு வந்தாலும், அவை அனைத்திற்கும் கட்டணங்களை வசூலிக்கின்றன. இவ்வாறு வங்கிகள் வசூலிக்கும் 8 வித முக்கிய கட்டணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
மினிமம் பேலன்ஸ்:
அனைத்து வங்கி கணக்குகளும் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன. 
 
பணம் எடுத்தல்: 
நம் வங்கிகளை சாராத பிற ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்-ல் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் வசூலிக்கின்றன.
 
பணம் டெபாசிட் செய்தல்: 
வங்கி கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் பொழுது அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. 
 
காசோலைகள்: 
ஒரு மாதத்திற்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும். இதில் வெளியூர் வங்கிகளைச சேர்ந்த காசோலை பரிவர்த்தனைகளுக்குத் தனி கட்டணம்.
 
குறுஞ்செய்திக்கு கட்டணம்: 
நம்முடைய வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக கைப்பேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் 
 
டெபிட் கார்டுகள்:
தொலைந்து போன அல்லது திருடு போன டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 
வணிகப் பரிவர்த்தனை கட்டணங்கள்: 
இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின் போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்படும் பொழுது கட்டணம் விதிக்கப்படுகிறது. 
 
அயல்நாட்டு பணப்பரிமாற்றம்: 
கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளின் மூலமாக அயல்நாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 % வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்தியைக் காட்டி மிரட்டி 100 பேரை காப்பாற்றிய கேரள இளைஞர்கள்