Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும்

பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும்
, வியாழன், 27 செப்டம்பர் 2012 (16:19 IST)
உலகின் பருவநிலை மாற்றத்தால் 2030 க்குள் 110 கோடி மக்கள் உயிரிழக்ககூடும், மேலும் உலகின் மொத்த உற்பத்தியில் 3.2 % வீழ்ச்சி ஏற்படும் என லன்டனை சேர்ந்த மனிதாபிமான கழகம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க தவரியதால் உலகம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. லன்டனை சேர்ந்த தாரா சர்வதேச கழகம், மனிதாபிமான உதவி மேம்பாட்டை மேற்கொண்டுவரும் இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுமார் 110 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தால் உயிரிழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு உலகின் 20 நாடுகள் இது அதிகாரபூர்வ தகவல் என ஒத்துக்கொண்டுள்ளது.

மேலும் உலகின் உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும். இதனால் பொருளாதார வளர்ச்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சராசரி வெப்பநிலை உயர்வு காரணமாக உருகும் பனி படலங்கள், தீவிர வானிலை, வறட்சி மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற காரணங்களை கொண்டு உலக மக்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பெரிதளவில் பாதிக்கப்படப்போவது உறுதி எனவும் கூறப்பட்டுள்ளன.

ஓசோன் படலத்தின் கார்பன் அளவு உச்சமடையும், இதனை தவிர்க்க தவறிய நிலையில் இதனை ஏற்க உலகம் தயாராக வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு, பட்டினி மற்றும் நோய் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்த இறப்பில் 90% மக்கள் வளரும் நாடுகளை சேர்ந்தவராக இருப்பர். பருவநிலை நலிவடைந்த நிலையில் ஏற்பட இருக்கும் இந்த பாதிப்பு காரணமாக 20 வளரும் நாடுகளுக்கு முன்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil