Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலநடுக்கம் - ஆய்வு

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலநடுக்கம் - ஆய்வு
, திங்கள், 22 அக்டோபர் 2012 (16:33 IST)
ஸ்பெயின் நாட்டில் 2011, மே, 11ஆம் தேதி மர்சியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிறிய அளவில் இருந்தாலும் 9 பேரை பலி வாங்கியது. மேலும் குறிப்பிடத் தகுந்த சேதங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்திற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேற்கு ஆன்டேரியோ பல்கலைக் கழக ஆய்வாளர் பாப்லோ கொன்சாலஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக எடுக்கப்பட்டுள்ளதால் பூமிப்பாறையின் மேற்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

அப்பகுதியின் நிலத்தடி நீரில் 250மீ குறைந்து போனதால் பூமியின் மேல்பரப்பில் அழுத்தம் ஏற்பட்டதால் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

மனித உபயோகம், பெருகி வரும் கட்டிடங்கள், பெரிய பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒரு பகுதியில் தேவைக்கதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது ஆகியவற்றினால் லோர்க்கா பெரும்பாறையில் அழுத்தம் ஏற்பட்டதால் அந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெறும் நிலநடுக்கம் மட்டுமல்ல தாங்கும் பாறை தனது இடத்தை விட்டு நழுவதையும் நிலத்தடி நீர் உறின்சப்படுவது தூண்டுகிறது.

கண்டத் தட்டுகள் நகர்வதால் பூகம்பம் ஏற்படுகிறது. இதற்கு மனித காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்று பழைய கோட்பாடு ஊறிப்போயுள்ள நிலையில் அணைக்கட்டுவது, நிலத்தடி நீர் ஆதாரம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் மனித நடவடிக்கைகளாலும் பூகம்பம் உருவாகிறது என்பது மேலும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil