Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோ யோ டெஸ்ட் மட்டுமே போதுமானதா? சச்சின் பதில்!

யோ யோ டெஸ்ட் மட்டுமே போதுமானதா? சச்சின் பதில்!
, திங்கள், 23 ஜூலை 2018 (17:39 IST)
இந்திய அணிக்குள் வீரர் நுழைய வேண்டும் என்றால் யோ யோ டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். யோ யோ டெஸ்டில் 16.1 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அணிக்குள் தேர்வாக முடியும் என்று விதியை வகுத்தது பிசிசிஐ.
 
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷிமி, அம்பதி ராயுடு, சஞ்சு சாம்ஸன் ஆகியோர் அணியில் தேர்வாகி யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அணிக்குள் வரும் வாய்ப்பை இழந்துவிட்டனர். 
 
இது குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சச்சின், இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கு யோ யோ தகுதி தேர்வு மட்டும் சரியானதல்ல. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் அணிக்குள் வரமுடியும் என்று கூறுவது தவறு. 
 
சில குறிப்பிட்ட தகுதிகளை வைத்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமேத் தவிர யோ யோ டெஸ்ட் மட்டும் மதிப்பிடக்கூடாது. நாங்கள் விளையாடிய காலத்தில் பீப் டெஸ்ட் என்று இருந்தது. அது ஏறக்குறைய யோ யோ போன்றது மாதிரிதான். ஆனால், அதற்காக அப்போது பீப் டெஸ்ட் மட்டும் வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. 
 
ஆடுகளத்தின் தன்மை, தனிப்பட்ட வீரரின் ஃபார்ம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத்தான் 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதிலும் அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்களை மாற்றி தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாக்கிப் போட்டி - நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி