Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”கேப்டன் பொறுப்பிலிருந்து சந்தோஷமாக விலக தயார்” - மகேந்திர சிங் தோனி

”கேப்டன் பொறுப்பிலிருந்து சந்தோஷமாக விலக தயார்” - மகேந்திர சிங் தோனி
, திங்கள், 22 ஜூன் 2015 (16:02 IST)
கேப்டன் பொறுப்பில் நான் விலகினால், இந்திய அணி நன்றாக விளையாடுமெனில் சந்தோஷமாக விலகத் தயாராக இருக்கிறேன் என்று மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
 

 
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 18ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை [21-06-15] நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வங்கதேசம் இந்திய அணியை வெற்றி கண்டது.
 
இந்நிலையில், தற்போது கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. உலகக்கோப்பை முன்னதாக ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றார்.
 
அதனையடுத்து மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டன் விராட் கோலி தலைமையேற்றார். மேலும், ஆஸ்திரேலியவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமானத் தோல்வியை தழுவியது. அதனையடுத்து நடைபெற்ற உலக்கோப்பை தொடரிலும் இந்திய அணி அறையிறுதிப் போட்டியோடு வெளியேறியது. தற்போது வங்கதேசத்துடனான தொடரிலும் இந்திய அணி ஆட்டம் கண்டு வருகிறது.
 
இந்நிலையில், இது குறித்து கூறிய கேப்டன் மகேந்திர சிங் தோனி, ”என்னுடைய கிரிக்கெட்டை நான் மிகவும் அனுபவித்து விளையாடி வருகிறேன். தொடர்ந்து இந்த கேள்வி வந்துகொண்டிருப்பது எனக்குத் தெரியும். ஊடகத்தினர் என்னை நேசிப்பதும் எனக்குத் தெரியும்.
 
இந்திய அணி மோசமாக விளையாடியதற்கு எல்லாம் நான்தான் காரணம் என்று நீங்கள் உண்மையிலேயே கருதி, என்னை நீங்கள் நீக்கினால் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று கருதினால் நான் பொறுப்பிலிருந்து சந்தோஷமாக விலகி, ஒரு சாதாரண வீரராக விளையாட தயாராக இருக்கிறேன்.
 
எப்படியும் இறுதியாக இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறிர்கள். ஒரு அணி கேப்டனாக அது எனக்கு ஒரு விஷயமே கிடையாது.
 
கேப்டனாக வரவேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்தது கிடையாது. ஆனால், அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். தற்போது அவர்கள் அதை எடுத்துக் கொண்டு வெளியேறச் சொன்னால், சந்தோஷமாக கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன்” என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil