Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றோ நாளையோ நீங்கள் பேசித்தான் ஆகனும்: ரவி சாஸ்திரி மீது கடுப்பில் ஹர்பஜன்

இன்றோ நாளையோ நீங்கள் பேசித்தான் ஆகனும்: ரவி சாஸ்திரி மீது கடுப்பில் ஹர்பஜன்
, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (18:12 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
இரண்டாவது போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்து பலரது விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் ரசிகர்கள் இந்திய அணியையும் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ஹர்பஜன் சிங் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஹர்பஜன் கூறியது பின்வருமாறு, ரவி சாஸ்திடி தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும். இன்றோ, நாளையோ அவர் பேசித்தான் ஆக வேண்டும். அவர்தான் அனைவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். 
 
இங்கிலாந்தின் பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் வித்தியாசமானதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். நாம் எதிர்த்துப் போராட எந்த ஒரு துணிவும் காட்டவில்லை. எந்த ஒரு சவாலையும் அளிக்காமல் சரணடைந்தோம், இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
 
ஒவ்வொரு போட்டியிலும் தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் லெவன் மாற்றப்படுகிறது. நடுவரிசை வீர்ர்களும் நிலைபெறவில்லை. 
 
லார்ட்ஸில் பசுந்தரை ஆடுகளம், மேகமூட்டமான வானிலை ஆனால் 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்தனர். இது தேவையா? என கடுமையாக விமர்சித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோபத்தில் இருக்கும் ரசிகர்களை சமாதானம் செய்த கோஹ்லி