Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனான பிரபல ஹிந்தி நடிகர்...

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனான பிரபல ஹிந்தி நடிகர்...
, செவ்வாய், 9 அக்டோபர் 2018 (19:15 IST)
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக கருதப்படுபவரான இயக்குநர் சங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 2.0 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில்  இயக்குநர் சங்கர் தன்  அடுத்த படமான இந்தியன் 2 விலும் நடிகர் அக்‌ஷய் குமாரையே வில்லனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் . அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் வியாபார நோக்கை கருத்தில் கொண்டு தான் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கு இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சம்மதம்  தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் சாதனை படைத்த தளபதி: மாஸ் காட்டும் சர்கார்!