அக்ஷயக்குமார் வீட்டுக்குள் நள்ளிரவில் குதித்தவர் கைது

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:10 IST)
அக்ஷய்குமார் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.


 
புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான அக்ஷய்குமாரின் வீடு மும்பை ஜூஹூ பகுதியில் இருக்கிறது. இவரது வீடு இருக்கும் பகுதிக்கு அரியானா மாநிலம் சோனிபேட் தட்வள்ளி என்ற ஊரை சேர்ந்த அங்கித் கோஸ்வாமி (வயது 20) என்ற இளைஞர் வந்தார். இவர் பங்களா காவலாளியிடம் நான் அக்‌ஷய்குமாரின் தீவிர ரசிகன் அவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். பாதுகாவலர்கள் அவரை உள்ளே விட மறுத்துவிட்டனர். இதனால் திரும்பி சென்ற அந்த வாலிபர் இரவு 2 மணிக்கு மீண்டும் அக்‌ஷய்குமார் வீட்டுக்கு வந்தார். பாதுகாவலர்களுக்கு தெரியாமல் காம்பவுண்டு சுவரில் ஏறி வீட்டுக்குள் குதித்தார். இதனை பாதுகாவலர் பார்த்துவிட்டார். அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஜூஹூ போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர். சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் அக்ஷய்குமாரை அந்த இளைஞர் சந்திக்க வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்தபோது அக்ஷய்குமார் வீட்டில் தான் இருந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் அஜித் ரசிகராக நடிக்கும் அதர்வா!