என்.டி.ஆர் படத்தில் மஞ்சிமா மோகன்!

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (11:30 IST)
என்.டி.ஆர் சுயசரிதை படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார்.

மறைந்த ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் வசூல் மன்னனாகவும் இருந்த என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. கிரிஷ் இயக்கி வரும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் விப்ரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
அதில் என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவும், அவரது மனைவியாக வித்யா பாலனும் நடிக்கிறார்கள். மேலும், சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், ஶ்ரீ தேவி வேடத்தில் ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்ட பலர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.
 
இப்படத்தில், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நடேந்தலா பாஸ்கர ராவ் வேடத்தில் பரேஷ் ராவல் நடிக்கவுள்ளார். என்.டி.ஆரின் மருமகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிக்க ராணா கமிட்டாகி உள்ளார். அவரது மனைவி புவனேஷ்வரி வேடத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’ படத்திற்கு பிறகு நேரடியான தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது குறிடப்படத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING