Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு
, வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (12:46 IST)
ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.



யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது ஆகியவை தொடர்பாக ரஷ்யா மீது முன்னதாக அமெரிக்கா சில தடைகள் விதித்திருந்த நிலையில், ரஷ்ய நிறுவனத்துடன் உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்த சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

அண்மையில் 10 ரஷ்ய சுகோய் Su-35 வகை போர் விமானங்களையும், S-400 வகை ஏவுகணைகளையும் சீனா வாங்கியது.2014-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா விதித்து வரும் தடைகளில் சீனா இடம்பெறவில்லை.
webdunia


ரஷ்யாவின் அரசு ஆயுத ஏற்றுமதியாளருடன் முக்கிய ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றம் செய்துகொண்ட சீனாவின் கருவிகள் அபிவிருத்தி துறை மற்றும் அதன் தலைவர் லீ ஷாங் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தடைகளின் முக்கிய குறி ரஷ்யா மீதுதான் என்று ஒரு மூத்த அமெரிக்க நிர்வாகத்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இது போன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகள் மீது எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பதில் என்ன?
webdunia


அமெரிக்கா விதித்துள்ள தடையால் தங்களின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று மாஸ்கோவில் ஒரு அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஃபிரான்ஸ் கிளிண்ட்சேவிச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், ''முன்னரே திட்டமிடப்பட்ட வகையில் அட்டவணையின்படி இந்த ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளது.

'இந்த ராணுவ சாதனத்தை வைத்திருப்பது சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஆயுத விற்பனைக்கு ஒரு முக்கிய வெளிநாட்டு சந்தையாக ஆசியா விளங்கி வருகிறது.கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் ஏறக்குறைய 70 சதவீதம் ஆசியா பங்கு வகிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்: பிரதமர் மோடி