Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பந்தயக் குதிரைகளின் வேகம் அதிகரிக்கிறது

பந்தயக் குதிரைகளின் வேகம் அதிகரிக்கிறது
, சனி, 27 ஜூன் 2015 (11:21 IST)
பந்தயக் குதிரைகளின் வேகம் தொடர்ந்து அதிகரித்துவந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 165 ஆண்டுகளாக பந்தயத்தில் வெற்றிபெற்ற குதிரைகளின் ஓடும் நேரத்தை ஆராய்ந்ததில், இது தெரியவந்துள்ளது.

பந்தயக் குதிரைகள் தற்போதைய வேகத்திற்கு மேல் ஓடுவதற்கு வாய்ப்பில்லை எனப் பலரும் நினைத்திருந்த நிலையில், இந்த ஆய்வு முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

இனப்பெருக்க முறைகளில் செய்யட்ட மாற்றங்களால் இந்த வேகம் ஏற்பட்டதா அல்லது பயிற்சியிலும் குதிரைகளைச் செலுத்துவதிலும் செய்யப்பட்ட மாற்றங்களால் இந்த வேகம் ஏற்பட்டதா என்பதை ஆராய வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராயல் சொசைட்டியின் இதழான பயாலஜி லெட்டர்ஸில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

1950ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, பந்தயக் குதிரைகளின் வேகம் அதிகரிக்கவில்லையென முந்தைய ஆய்வு முடிவுகள் காட்டியிருந்தன.

பந்தயத் துறை சார்ந்தவர்களும் அந்த முடிவுக்கே வந்திருந்தார்கள்.

இதனால், வேகமாக ஓடும் என்ற நம்பிக்கையில் பண்ணைகளிலிருந்து அதிக விலை கொடுத்து குதிரைகளை வாங்குவது குறித்த கேள்விகளும் எழுந்திருந்தது.

இந்த நிலையில்தான், எக்ஸடர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த பாட்ரிக் ஷர்மான், குதிரைகளின் வேகத்தை ஆராய்வதற்கு முடிவுசெய்தார். முந்தைய ஆய்வுகள் முழுமையாக செய்யப்படவில்லை என்று அவர் கருதினார்.

ஸ்பிரிண்ட் போட்டிகள்

முந்தைய ஆய்வுகளில் மிகக் குறைவான பந்தயங்களே கணக்கில் கொள்ளப்பட்டிருந்தன. தவிரவும், 8 முதல் 12 ஃபர்லாங் போட்டி, 14-20 ஃபர்லாங் போட்டி ஆகியவற்றின் நேரங்களே கணக்கில்கொள்ளப்பட்டிருந்தன. 5 முதல் 7 ஃபர்லாங் தூரப் போட்டிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இதையடுத்து, 1850க்கும் 2012க்கும் இடையில், மிக வேகமாக ஓடிய குதிரைகளின் வேகத்தை ஷர்மான் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

1910க்கும் 1975க்கும் இடைப்பட்ட காலத்தில் வேகத்தில் எந்த மாறுதலும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதை ஷர்மான் கண்டறிந்தார். ஆனால், அதற்குப் பிறகு ஸ்பிரிண்ட் பந்தயங்கள் எனப்படும் 5-7 ஃபர்லாங் தூரப் போட்டிகளில் தொடர்ச்சியாக முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

ஆறு ஃபர்லாங் பந்தயங்களில் வெற்றிபெரும் குதிரைகளின் நேரத்தில் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு வினாடிக்கும் மேல் முன்னேற்றம் இருந்தது.

ஒரு விநாடி அதிகரிப்பு என்றாலும்கூட ஸ்பிரிண்ட் பந்தயங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வேக அதிகரிப்பாகும். அதாவது, தற்போது இருக்கும் பந்தையக் குதிரை, 90களில் ஓடிய பந்தயக் குதிரையை தோற்கடித்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம்.

நீண்ட தூரப் பந்தயங்களில் முன்னேற்றம் ஏற்படுமா?

ஆனால், நீண்டத் தூரப் பந்தயங்களில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை.

இனப்பெருக்க முறைகளில் மாற்றம்செய்தால், நீண்ட தூரம் ஓடும் குதிரைகளிலும் வேகம் ஏற்படும் என்கிறார் ஷர்மான்.

70களுக்குப் பிறகு குதிரைகளைப் பயிற்றுவிக்கும் முறையிலும் ஜாக்கிகள் குதிரைகளை ஓட்டும் முறையிலும் ஏற்பட்டிருந்த மாற்றங்களும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுவதை ஷர்மான் ஏற்கவில்லை.

நீண்ட தூரம் ஓடும் குதிரைகள் தங்கள் உச்சகட்ட வேகத்தை எட்டிவிட்டன எனவும் தான் நம்பவில்லையென்றும் ஷர்மான் கூறியிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil