Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூட்டை சித்தர்

மூட்டை சித்தர்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (20:28 IST)
பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். சிலரெல்லாம் அவரைப் பார்க்கப் போனால், போடா இங்கே எதுக்குடா வந்த, என்று துரத்திவிடுவார். சிலரைப் பார்த்து, அந்தக் கல்லையெல்லாம் பொறுக்கி இந்தப் பக்கம் போடு என்பார்.

சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேர் போயிருக்கிறார்கள். அதில் ஒருவரைப் பார்த்து, போடா, இங்கே வராதடா, பொம்பளை பின்னாடி சுத்தறவனே என்று சொல்லியிருக்கிறார். அவருடன் சென்றவர் நம்முடைய நண்பர். சாமி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் அது மாதிரியான ஆள்தான் என்று சொன்னார்.

இதேபோல வேறொருவர் போன போது, தெற்கே போய் வடக்கே போடா என்று சொல்லியிருக்கிறார். இவர், தெற்கிலும் ஒரு வீடு பார்த்திருக்கிறார். வடக்கிலும் ஒரு வீடு பார்த்திருக்கிறார். இரண்டு வீட்டில் எதை வாங்குவது என்று ஒரு மாதமாக குழப்பத்தில் இருந்திருக்கிறார். சித்தர் அவ்வாறு சொன்னதால், முதலில் தெற்கில் இருந்த வீட்டை வாங்கிவிட்டார். இதையெல்லாம் சித்தர்களுடைய சங்கேத பாஷை என்று சொல்வார்கள்.

பொதுவாக சித்தப் புருஷர்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் இப்பொழுது கூட ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்குகிறார். திடீரென்று நான்கு நாட்களுக்கு சாப்பிடமாட்டார். எங்கேயாவது சென்றுவிடுவார். எங்கேயாவது சென்று உட்கார்ந்துகொண்டு இருப்பார். எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

பழனி பக்கம் போனால், இதுபோன்று சாது சித்தர், சாக்கடை சித்தர், மூட்டை சித்தர் எ‌ன்று பல‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். குட்டை சாமி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் முக்தி அடைந்துவிட்டார். இவரெல்லாம் ஒரு நேரத்தில் மூன்று இடத்திலெல்லாம் இருந்திருக்கிறார். பெசன்ட் நகரில் இருக்கும் நண்பர் ஒருவருட‌ன் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் பழனியில் இருக்கிறோம், எங்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சித்தர் வந்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நண்பர் சொன்னார். என்ன சொல்ற நீ, நாங்கள் பழனிக்கு வந்திருக்கிறோம். சித்தர் எங்களுடன்தான் இருக்கிறார் என்று சொன்னோம். இல்லை, இங்கே வந்திருக்கிறார், பேசு என்று ஃபோனை கொடுத்தார். அவர் பேசினார். இதுபோன்றெல்லாம் நடந்திருக்கிறது. நான் குறிப்பிட்ட மூட்டை சித்தரையெல்லாம் பார்த்தால், பைத்தியக்காரனைப் போலத்தான் இருப்பார். ஆனால், நிறைய சக்திகள் உடையவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil