Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?
பொருத்தம் பார்க்கும் போதே கருச்சிதைவுகளை ஏற்படும் வாய்ப்பு அந்த வரனுக்கு இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்து விடுங்கள் என்று மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டாரிடம் வெளிப்படையாக கூறி விடுவோம்.

சமீபத்தில் வந்திருந்த ஜாதகத்தில் பெண்ணிற்கு 5இல் செவ்வாய்+கேது இருந்தது. மணமகன் ஜாதகத்தில் 5இல் சனி+ராகு இருந்தது. இருவருக்கும் மற்ற பொருத்தங்கள் சிறப்பாக இருந்ததால் சிலர் திருமணம் செய்யலாம் எனக் கூறியிருந்ததாக பெண்ணின் தந்தை என்னிடம் கூறினார்.

ஆனால் இந்தத் திருமணத்தை நடத்த வேண்டாம் என்று நான் அவருக்கு அறிவுறுத்தினேன். காரணம், இருவருக்கும் திருமணம் நடந்தால் கருச்சிதைவு உண்டாகும். தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதால் கர்ப்பபை பலவீனமாகும். நவீன மருத்துவ முறைகளைப் (IVF) பின்பற்றினால் கூட கரு தங்காது என எடுத்துரைத்தேன்.

எனவே, கருச்சிதைவு ஏற்படுவதை பொருத்தம் பார்க்கும் போதே நம்மால் தவிர்க்க முடியும் என்று கூறுவதற்காக இந்த உதாரணத்தைக் கூறினேன். ஆனால் சில பெற்றோர் இதுபற்றிக் கவலைப்படாமல் பொருத்தம் சரியாக இருப்பதாகக் கூறி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

ஒருவேளை, கருச்சிதைவு ஏற்படும் ஜாதகங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், கரு உருவாகும் காலத்தை அவர்களின் ஜாதகத்தை வைத்து கணிக்க வேண்டும். குறிப்பாக 5க்கு உரிய கிரகம் தம்பதிகளுக்கு வலுவடையும் போது கருவுறுவது சிக்கலைக் குறைக்கும். தசாபுக்தியும் முக்கியமானதாகும்.

பரிகாரம்: அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் திருக்கருகாவூர், திருசெந்தூர் போன்ற கோயில்களுக்கு செல்லலாம். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பொதுவான பரிகாரம்.

தனிப்பட்ட முறையில் அவரவர் ஜாதகத்தை கணித்து அதற்கேற்ற வழிபாட்டு முறை, பரிகாரங்களை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக ஒரு சிலருக்கு சித்தர் பீட வழிபாடு சிறப்பாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil